மடிக்கணினி பேட்டரி பேக்குகளை தன்னார்வமாக திரும்பப்பெறுதல் மற்றும் பதிலீடு செய்தல்

Indonesia

Pilipino

Melayu

简体中文

繁體中文

සිංහල

தமிழ்ภาษาไทยEnglish


அன்பார்ந்த மதிப்புமிக்க வாடிக்கையாளரே, 

ஆகஸ்டு 27, 2015 - ஃபுஜிட்சு தயாரிப்புகளுக்கு தாங்கள் அளித்துவரும் ஆதரவுக்காக உங்களுக்கு நன்றி.

அசலாகவோ அல்லது பதிலீடுகளாகவோ பானாசோனிக் கார்ப்பரேஷனால் தயாரிக்கப்பட்டு ஃபுஜிட்சு மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் சில பேட்டரி பேக்குகள், சில அரிய சூழ்நிலைகளில் தீப்பற்றி, எரியக்கூடும் என்று நாங்கள் அறியவந்துள்ளோம். அதன்படி, பாதிக்கப்பட்ட பேட்டரி பேக்குகளை ஃபுஜிட்சு தன்னார்வமாக திரும்பப் பெற்றுக்கொள்ளும் அல்லது பதிலீடு செய்யும்.

கீழ்கண்ட “பாதிக்கப்பட்ட பேட்டரி பேக்குகள்”இல் குறிப்பிடப்பட்டுள்ள பேட்டரி பேக்குகளை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் “ஒரு பேட்டரி பதிலீட்டிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது” என்கிற பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். பேட்டரி பேக் பதிலீடு செய்யப்படும் வரை உங்கள் மடிக்கணினி பாதுகாப்பாக பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, தயவுசெய்து கீழ்க்காணும் அறிவுரைகளை வாசிக்கவும்.

தனது வாடிக்கையாளர்களுக்கு தான் ஏற்படுத்தியுள்ள அசௌகரியத்திற்காக ஃபுஜிட்சு உளமாற மன்னிப்பு கேட்டுக்கொள்வதோடு பேட்டரிபேக்கை திரும்பப் பெறவும் பதிலீடுசெய்யவும் உங்கள் ஒத்துழைப்பை கேட்டுக்கொள்கிறாது.

பாதிக்கப்பட்ட தயாரிப்புகள்

உங்கள் மடிக்கணினி “உட்பட்ட மடிக்கணினிகள்”இன் கீழ் பட்டியலிடப்பட்டு பேட்டரி பேக் “பாதிக்கப்பட்ட பேட்டரி பேக்கள்”இன் கீழ் பட்டியலிடப்பட்டு இருந்தால் உங்கள் பேட்டரி பேக் திரும்பப் பெறுவதற்கும் பதிலீடு செய்யப்படுவதற்கும் உட்பட்டது

உட்பட்ட மடிக்கணினிகள்

2011 மற்றும் 2012 இல் வெளியான சில ஃபுஜிட்சு மடிக்கணினி மாதிரிகள் இந்த திரும்பப் பெறுதலுக்கு உட்படலாம். இந்த மாதிரிகளில் பயன்படுத்தப்பட்ட, பழுதடைந்தபோது, அல்லது தனியாக வாங்கப்பட்ட விருப்பத்தெரிவு பேட்டரிபேக்குகளோடு பதிலீடு செய்யப்பட்ட பேட்டரி பேக்களும் உட்படலாம்.  உட்பட்ட மடிக்கணினிகளை கண்டறிய தயவுசெய்து இங்கே கிளிக்செய்க.

பாதிக்கப்பட்ட பேட்டரி பேக்கள்

 கீழ்க்கண்ட தயாரிப்பு எண்கள் மற்றும் பகுதி வரிசை எண்களினால் தலைப்பிடப்பட்ட பேட்டரிபேக்கள் திரும்பப்பெறவும் பதிலீடுசெய்யப்படவும் உட்பட்டவை.

பாதிக்கப்பட்ட பேட்டரி பேக்கள்
தயாரிப்பு எண்பகுதி வரிசை எண்
CP556150-01Z110802 முதல் Z111212
CP556150-02Z120102 முதல் Z120512

தயாரிப்பு எண் மற்றும் பகுதி வரிசை எண் ஆகியவை பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்டிக்கரின் மீதுள்ள பார்கோடுக்கு கீழ் அச்சிடப்பட்டு உள்ளன. தயவுசெய்து சிவப்பு நிறத்தில் குறியிடப்பட்டுள்ள பகுதிகளை சரிபார்க்கவும்.

  • தயாரிப்பு எண்: ”CP” உடன் தொடங்கும் எண்ணெழுத்து எழுத்துக் குறிகளின் வரிசைகள்

CP556150-01.png

          P/N : CP556150-01 அல்லது P/N : CP556150-02 ஆகியவை பாதிக்கப்பட்டவை.


  • பகுதி வரிசை எண்: ஹைபனுக்கு பின்னர் ”Z” உடன் தொடங்கும் எண்ணெழுத்து எழுத்துக் குறிகளின் வரிசைகள்

Z110907.png

பேட்டரி பேக்கின் தயாரிப்பு எண் மற்றும் வரிசை எண்ணை எவ்வாறு சரிபார்ப்பது

முக்கியம்: பேட்டரி பேக்கை நீக்கும்போது தயாரிப்பு மற்றும் வரிசை எண்களை உறுதிசெய்யவும், தயவுசெய்து கணினி நிறுத்தப்பட்டு இருப்பதை உறுதிசெய்யவும், ஏசி அடாப்டர் பிளக்கை கழட்டவும், அதன் பின்னர் பேட்டரி பேக்கை நீக்கவும்.

பேட்டரி பதிலீடு வரை உங்கள் மடிக்கணினியை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது


பாதிக்கப்பட்டுள்ள மடிக்கணினி பேக் உடைய வாடிக்கையாளர்கள் பேட்டரி பேக் பதிலீடு செய்யப்படும் வரை பாதுகாப்பாக தங்கள் மடிக்கணினியை பயன்படுத்த கீழ்க்காணும் இரண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஏசி அடாப்டரோடு மட்டும் உங்கள் மடிக்கணினியை பயன்படுத்த முடிகின்ற அசௌகரியத்திற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.

1. தயவுசெய்து பேட்டரி பேக் நீக்கப்பட்டு உங்கள் மடிக்கணினியை பயன்படுத்தவும்.

  • உங்கள் கணினியை பயன்படுத்தும்போது, தயவுசெய்து உங்கள் பேட்டரி பேக்கை நீக்கிவிட்டு ஏசி அடாப்டர் பிளக்கை இணைக்கவும்.
  • பேட்டரி பேக்கை நீக்கும்போது, தயவுசெய்து மடிக்கணினி நிறுத்தப்பட்டு இருப்பதையும், ஏசி அடாப்டரின் பிளக் கழட்டப்பட்டு இருப்பதையும் உறுதிசெய்யுங்கள்.

2. பேட்டரி பேக்கானது நீக்கப்பட்ட பின்பு அதை தயவுசெய்து சரியான முறையில் ஸ்டோர்செய்து வைக்கவும்.

  • தயவுசெய்து பேட்டரி பேக்கை குளிர்ச்சியான, உலர்வான இடத்திலே எரியக்கூடிய பொருட்களைவிட்டு தொலைவில் வைக்கவும்.
  • தயவுசெய்து பேட்டரி பேக்கை ஸ்டோர் செய்து வைக்கும்போது அதை சார்ஜ் செய்ய வேண்டாம்.

பேட்டரி பதிலீட்டிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் மேற்கொண்ட தகவல் 


மேலும் தகவலுக்கு, வாடிக்கையாளர்கள் எமது சேவை மையத்தை இங்கே தொடர்புகொள்ளலாம்: 

பேட்டரி பதிலீட்டிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது (ஜப்பானில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு)

ஒரு பதிலீட்டிற்கு விண்ணப்பிக்கும்போது கீழ்க்கண்ட் தகவல் தேவைப்படும்: 

  • பேட்டரி பேக்கின் தயாரிப்பு எண் மற்றும் வரிசை எண் 
  • மடிக்கணினியின் மாதிரி பெயர் மற்றும் வரிசை எண் 
    உங்கள் பேட்டரி பேக் திரும்பப்பெறப்பட்டு தேவைப்பட்டால் பதிலீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் இங்கே கிளிக் செய்க (ஜப்பானிய மொழி மட்டும்) 

※ இந்த அறிவுறுத்தலின் உள்ளடக்கங்கள் அவை வெளியிடப்பட்டபோது துல்லியமாக இருந்தன, ஆனால் அறிவிப்பின்றி மாறுதலுக்குட்படக்கூடியவை. இந்த அறிவுறுத்தலின் சமீபத்திய பதிப்புக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள்: http://www.fujitsu.com/global/about/resources/news/notices/2015/0827-01.html உங்கள் புரிந்துகொள்ளுதலுக்காக நாங்கள் உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.